மகாத்மா காந்தியின் கொள்கை களை முன்னெடுத்துச் செல்வது தான் எனது போராட்டம் என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார் கூறியுள்ளார்.
ஜூலை 17-ம் தேதி நடைபெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்த லில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மீரா குமார் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
1917-ல் மகாத்மா காந்தியால் இந்த ஆசிரமம் தொடங்கப்பட்டது. இங்கிருந்துதான் விடுதலைப் போராட்டத்தை காந்திஜி தலைமை யேற்று நடத்தினார். இந்த ஆசிரமத்தில் மீரா குமார் நேற்று சுமார் 40 நிமிடங்கள் இருந்தார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பரத்சிங் சோலங்கி, சங்கர்சிங் வகேலா ஆகியோரும் இருந்தனர்.
அப்போது மீரா குமார் கூறும் போது, “நான் சபர்மதி ஆசிரமத் துக்கு வரக் காரணம் இங்கிருந்து சக்தியைப் பெற வேண்டும் என்பதே யாகும். காந்தி இல்லத்தில் சில மணித்துளிகள் இருந்தேன். எனக்கு மன அமைதி கிட்டியது. புத்துணர்வும் கிட்டியுள்ளது. மகாத்மா காந்தியின் கொள்கை களை முன்னெடுத்துச் செல்லவே நான் போரிடுகிறேன். குஜராத் மக்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்றார்.
சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் மீரா குமார் சற்று நேரம் நூல் நூற்றார்.
முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தல் இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியே தவிர இரண்டு தலித்துகளுக்கு இடையே யான போட்டியல்ல. இரண்டு தலித்துகளுக்கு இடையிலான போட்டியைப் போல் இத்தேர்தலை சிலர் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். குஜராத்தில் இருந்துதான் காந்தியின் சித்தாந்தம் தேசம் மற்றும் உலகம் முழுவதும் பரவியது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் கொள்கைகளுக்காகவே நாங்கள் போட்டியிடுகிறோம் என் பதை மக்களை உணரச் செய்யவே நான் இங்கு வந்தேன்” என்றார்.
சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இங்கு வந்தார். இந்நிலையில் மீரா குமார் நேற்று இங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.