தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 14 முதல் 22-ம் தேதி வரை 16 பச்சிளம் குழந்தைகள் இறந்த பிரச்சினையை மாநிலங் களைவையில் திமுக உறுப்பினர் கனிமொழி நேற்று எழுப்பினார். அப்போது, “தருமபுரியில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப் புடன் வழங்கப்படும் பேறுகால உதவி நிதி ரூ.12,000 உரிய நேரத்தில் கிடைப்பதில்லை” என்று குற்றம் சாட்டினார். இதற்கு, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இது குறித்து கனிமொழி பூஜ்ஜிய நேரத்தில் மேலும் பேசிய தாவது: இந்த நிலைமையை தானாக முன்வந்து எடுத்துக் கொண் டுள்ள தேசிய மனித உரிமை கள் ஆணையம் நான்கு வாரங்க ளுக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இறந்த குழந்தை களின் உறவினர்கள் மருத்துவ வசதி இல்லாததால்தான் அவை இறந்துவிட்டதாக குற்றம் சாட்டு கின்றனர். ஆனால் தமிழக முதல்வர் தாய்மார்களின் ஊட்டச் சத்தின்மை யாலும், குழந்தைகள் எடை குறை வாகப் பிறந்ததாலும் இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இந்தப் பின்தங்கிய மாவட்டத் தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் வழங்கப்படும் ரூ.12,000 பேறுகால உதவி நிதி பெரும்பாலான தாய்மார்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை இதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிராக ஊட்டச்சத்து பாரபட்சம் நிலவி வருகிறது, சிறுவர்களை விட சிறுமிகள் ஊட்டச் சத்து குறைவாகவே உள்ளனர். எனவே தாய்மார்களுக்கு பேறுகால உதவி உரிய காலத்தில் போய் சேர்வதை உறுதி செய்யவேண்டும். சுகாதாரத்துறை அமைச்சரும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் நாடு முழுவதுமுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போதுள்ள உதவி திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
அப்போது, மாநிலங்களவை யில் அமர்ந்திருந்த அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கனிமொழியை பேச விடாமல் சுமார் பத்து நிமிடங்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுக மாநிலங்களவைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், கனிமொழி பேசுவது தவறு எனவும், அவரை பேச அனுமதிக்கக் கூடாது எனவும் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த துடன் அதிமுகவினர் அமளிக்கு ஆட்சேபம் தெரிவித்த சபாநாயகர் பி.ஜே.குரியன், கனிமொழி பேச்சில் ஆட்சேபம் எதுவும் இருப்பின் அவர் பேசி முடித்த பின் அதை பதிவு செய்ய அனுமதிப்பதாகக் கூறினார். அதன் பிறகு, கனிமொழி தனது உரையை முடித்தார். ஆனால், அவரது உரைக்குப் பின் அதிமுக உறுப்பினர்கள் யாரும் பேச முன்வரவில்லை.