இந்தியா

கர்நாடகாவில் பாரம்பரியம் மிக்க கம்பளா பந்தயம் நடத்த பிரணாப் ஒப்புதல்: பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இரா.வினோத்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படுவதைப் போல கர்நாடக மாநிலத்தில் கம்பளா பந்தய போட்டி கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் சேறு நிறைந்த வயலில் எருமை காளையை இளைஞர்கள் விரட்டி செல்வார்கள். இதில் வெற்றிப் பெறும் எருமை காளைக்கு பரிசு வழங்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் நல அமைப் பினர், எருமை துன்புறுத்தப் படுவதாக முறையிட்டதை அடுத்து கம்பளா பந்தயத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் மங்களூரு, உடுப்பி, பட்கல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் வெடித்ததை தொடர்ந்து தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதைப் பின்பற்றி, கர்நாடகாவில் கம்பளா போட்டி நடத்தக் கோரியும், அவசர சட்டம் இயற்றக் கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் கம்பளா போட்டி நடத்த அவசர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதற்கு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கடலோர கர்நாடகாவில் மங்க ளூரு, உடுப்பி, பட்கல் உள்ளிட்ட பகுதிகளில் துளு மக்கள் அமைப் பினர் பட்டாசு வெடித்தும், இனிப் புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT