இந்தியா

கடந்த மாதத்தில் 3,500 குழந்தைகள் ஆபாசத் தளங்கள் முடக்கம்: மத்திய அரசு

பிடிஐ

கடந்த மாதத்தில் மட்டும் 3,500 குழந்தைகள் சார்ந்த ஆபாசத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் சார்ந்த ஆபாச தளங்களின் அச்சுறுத்தலைப் போக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பான கோரிக்கை அடங்கிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்விடம் பேசிய மத்திய அரசு, சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் ஆபாசத் தளங்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகளைப் பொருத்துமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறியது.

நீதிபதிகளிடம் பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், ''பள்ளிப் பேருந்துகளில் ஜாமர்களைப் பொருத்துவது சாத்தியமற்றது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் ஆபாசத் தளத்தின் பயன்பாட்டைத் தடுக்க ஜாமர் கருவிகளைப் பொருத்த முடியுமா என்று கேட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இரு நாட்களுக்குள் அறிக்கை

இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரண்டு நாட்களுக்குள் குழந்தைகள் ஆபாச தளங்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT