குறுகிய தூர இலக்குகளை தாக்கும் வகையில் உள்நாட்டி லேயே மேம்படுத்தப்பட்ட அதி நவீன ஏவுகணையை ஒடிசாவில் நேற்று இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து பார்த்தனர்.
அதிவிரைவாக செயல்பட்டு நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழக (டிஆர்டிஒ) விஞ்ஞானிகள் இந்த ஏவுகணையை மேம்படுத்தி யுள்ளனர். 25 முதல் 30 கி.மீ தூரம் வரை சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே கடந்த ஜூன் 4-ம் தேதி முதல் முறையாக சோதனை நடத்தப்பட்ட நிலை யில், 2-வது முறையாக ஒடிசா வின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கி ணைந்த சோதனை மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் செலுத்து வாகனம் மூலம் நேற்று காலை 11.30 மணியளவில் விண்ணில் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. ஏவுகணையின் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, டிஆர்டிஒ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிலத்தில் இருந்து விண்ணில் பாயும் ஏவு கணை உருவாக்கத்தில் இது வொரு முக்கியமான மைல் கல் என்றும் பாராட்டினார்.
டிஆர்டிஓ செயலாளர் டாக்டர் எஸ்.கிறிஸ்டோபரும், சோத னையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏவுகணை சோதனையின்போது ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சோதனை கூடத்தின் இயக்குநர் எம்எஸ்ஆர் பிரசாத், பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோ சகர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடனிருந்தனர்.