இந்தியா

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் செப். 23-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 23-ல் தொடங்கி, அக்டோபர் 1 வரை நடைபெறவுள்ளது.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு தலைமையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிவாச ராஜு, ‘‘திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 27-ம் தேதியும், தேரோட்டம் 30-ம் தேதியும் நடக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது. கருட சேவை நடக்கும் நாளில் பக்தர்களின் வசதிக்காக 3,000 பேருந்துகள் இயக்கப்படும். பிரம்மோற்சவ நாட்களில் 24 மணிநேரமும் மலைப் பாதை திறந்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT