இந்தியா

கறுப்புப் பணத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

டெல்லியில் நேற்று பட்டயக் கணக்காளர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்கள் மேலும் கடினமான நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளிடம் இருந்து புள்ளிவிவரம் தொடர்ந்து பெறப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற் பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்பு கிறது. ஜிஎஸ்டி அமலாவதற்கு 48 மணி நேரம் முன்பு, சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள் காரணமாக 1 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 37 ஆயிரம் போலி நிறுவனங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. சுவிட்சர் லாந்தில் கறுப்புப் பணம் பதுக்கு வோர் குறித்த தகவல்களை 2 ஆண்டு களில் அந்நாட்டு அரசு இந்தியா வுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள உள்ளது. இதனால் கறுப்புப் பணம் வைத்திருப் பவர்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்றார்.

SCROLL FOR NEXT