இந்தியா

தேர்தல்: நாக்பூர் சென்று பார்த்தார் பிரிட்டிஷ் தூதர்

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை நேரில் காண மகாராஷ்டிரத்தில் உள்ள நாக்பூர் நகருக்கு வியாழக்கிழமை வந்தார் பிரிட்டிஷ் தூதர் சர் ஜேம்ஸ் டேவிட் பெவன்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் இந்த தேர்தலை நேரில் கண்டறிய நாக்பூர் வந்துள்ளேன். பிரிட்டனும் இந்தியாவில் நடக்கும் இந்த தேர்தலை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.

டெல்லியிலும் வாக்குப்பதிவு நடந்தாலும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் தேர்தலை பார்க்க ஆசைப்பட்டதால் வந்தேன் என்றார். முன்னதாக, டெல்லியிலிருந்து நாக்பூர் வந்த ஜேம்ஸ், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரியின் வீட்டுக்கு சென்றார். அரை மணிநேரம் அவருடன் பேசினார் ஜேம்ஸ்.

பின்னர் சில வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தேர்தல் நடைமுறைகளை நேரில் கண்டறிந்தார்.

SCROLL FOR NEXT