நாட்டின் 15-வது அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
86 வயதான வேணுகோபால் இதற்கு முன், மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சியில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். 2ஜி வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்பவராக நியமிக்கப்பட்டார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்அத்வானி சார்பில் ஆஜராகி வந்தார்.