இந்தியா

சீன ஊடுருவல் விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியிருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியமாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அஜய் மாக்கன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சிக்கிம் மாநில எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவியுள்ளது. ஆனால் இதனை மத்திய அரசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதவில்லை. அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது. ‘ஊடுருவல்’ என்று குறிப்பிடாமல் ‘வரம்பு மீறல்’ என்பது போன்ற மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மத்திய அரசு வார்த்தைகளில் மட்டுமே வீரம் காட்டுகிறது. செயலில் பூஜ்ஜியமாக உள்ளது.

சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை ராஜ்ஜிய ரீதியில் கையாள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT