நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் 2,753 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அங்கு பணியாற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. உளவுத் துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நக்ஸல் பகுதிகளில் பணியாற்றிய 2,753 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.