இந்தியா

சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து சீன படைகள் வெளியேறாவிட்டால் டோகாலா பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருக்க ராணுவம் முடிவு

பிடிஐ

சிக்கிம் மாநில எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்ற சீனாவின் மிரட்டலை இந்திய ராணுவம் கருத்தில் கொள்ளவில்லை.

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடானின் எல்லைகள் இணையும் முச்சந்தி டோகாலா என்ற பகுதியில் உள்ளது. இந்த பகுதி மீது சீனாவும் பூடானும் உரிமை கொண்டாடுகின்றன. இந்நிலையில் டோகாலா பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. இதனால் இந்தியாவைக் கண்காணிக்க சீன ராணுவம் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதையடுத்து, சாலை போடும் பணியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நீடிக்கிறது. இதனால் இரு நாட்டு ராணுவமும் அப்பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர் களை இந்தியா திரும்பப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எல்லாம் இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று சீனா தெரிவித்திருந்தது.

ஆனால், சீன அரசின் அழுத் தத்துக்கு அடிபணியப் போவ தில்லை என்ற நிலைப்பாட்டை இந்திய ராணுவம் எடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து சீன படைகள் வெளியேறாவிட்டால் டோகாலா பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருப்பது என இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. சீன ராணுவத்துடனான மோதல் முடிவுக்கு வரும் வரை இப்போதுள்ள நிலையைத் தொடர இந்தியா முடிவு செய்துள்ளதாக ராணுவ அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், இரு நாடுகளுக் கிடையிலான இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு கிடைக்கும் என கடந்த கால நிகழ்வை சுட்டிக்காட்டி இந்திய ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது தொடர்பாக 2012-ல் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

-

SCROLL FOR NEXT