இந்தியா

ஆக. 4-ம் தேதிக்கு பிறகு கட்சிப் பணி தொடங்குவேன்: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் தகவல்

இரா.வினோத்

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வெங்க டேஷ், அதிமுக‌ எம்எல்ஏ.க்கள் ஜக்கையன், முத்தையா உள்ளிட் டோர் பெங்களூரு மத்திய‌ சிறை யில் நேற்று சசிகலாவை சந்தித்து பேசினர். அப்போது சசிகலா அதிமுக எம்எல்ஏ.க்களிடம் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விசாரித்து, சில அறிவுரைகளை வழங்கினார். இதையடுத்து சசிகலா டிடிவி தினகரன், மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோருடன் தனியாக 45 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து வெளியே வந்த டிடிவி தினகரன், ‘‘அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உத்தரவின்படி அணிகள் இணைப்புக்காக நான் 60 நாட்கள் விலகி இருக்கிறேன். அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ம் தேதிக்கு பிறகு எனது கட்சி பணிகளை தீவிரப்படுத்துவேன். அவர்களால் இரு அணிகளையும் இணைக்க முடியவில்லை. நானும் சசிகலாவும் நினைத்தால் இரு அணிகளையும் நிச்சயம் இணைத்து விடுவோம்.

எம்.நடராஜன் எங்களிடையே பேசி, பிரச்சினையை தீர்க்கவும் இல்லை. அவர் எங்களது குடும்ப உறுப்பினரே தவிர, அதிமுக செய் தித் தொடர்பாளர் இல்லை. பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருமாறு யாரும் அழுத்தம் தரவில்லை. சசிகலாவின் உத்தரவின் பேரிலே நாங்கள் அவரை (ராம்நாத் கோவிந்த்) ஆதரித்து இருக்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT