இந்தியா

அமர்நாத் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

பிடிஐ

அமர்நாத் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதை அடுத்து, அங்கு பாது காப்பை பலப்படுத்தும்படி அதிகாரி களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தர விட்டுள்ளார். காஷ்மீரில் எடுக்கப் பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேற்று விரிவாக எடுத்துரைத்தார்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங் கியது. ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு, யாத்ரீகர்கள் கடந்த திங்கள்கிழமை நகரில் இருந்து ஜம்மு நோக்கி சென்றனர். அப்போது அனந்தநாக் மாவட்டம் கானாபால் வழியில் சென்றபோது இரவு 8.20 மணிக்கு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 யாத்ரீகர்கள் பலியாயினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, காஷ்மீரில் பாது காப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், உள்துறை உயரதிகாரிகள், புலனாய்வு ஏஜன்சிகளின் அதி காரிகள், துணை ராணுவப் பிரிவு களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற் றனர்.

அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் 2 வழித்தடங்களில் பாது காப்பு நடவடிக்கைகள், தீவிர வாதிகள் தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், இனி இதுபோல் தீவிரவாத தாக்குதலை தடுப்பது எப்படி என்பது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பின்னர், அமர்நாத் யாத்திரை அமைதியாக நடக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட்டார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘அமர்நாத் யாத்ரீ கர்கள் 7 பேர் இறந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது. தீவிரவாத தாக்குதலை காஷ் மீரில் அனைத்து பிரிவு மக்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித் துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்துக்கு எதிராக இருக்கிறது’’ என்றார்.

இந்தக் கூட்டம் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்தித்து, காஷ்மீர் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இதற்கிடையில், தீவிரவாத தாக்குதல் நடந்ததும் உடனடியாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையில் உயரதிகாரிகள் குழு காஷ்மீர் சென்றது. அங்கு ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இக்குழு நேரில் ஆய்வு செய்தது. மேலும், சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் ஆர்.ஆர்.பட்நாகர் உடனடியாக நகர் விரைந்து சென்று அமர்நாத் யாத்ரீகர்கள் செல்லும் வழிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக துணை ராணுவத்தைச் சேர்ந்த 21 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரில் பாதுகாப்புக்கு குவிக்கப் பட்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 9,500 அதிகமாகும். அப்படி இருந்தும் தாக்குதல் சம்பவம் நடந்ததற்கு, பேருந்தின் ஓட்டுநர் விதி மீறியதே காரணம் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT