இந்தியா

ரூபா ஆதரவு கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இரா.வினோத்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா கடந்த 13-ம் தேதி, ‘‘பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள‌ கைதிகள் கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட் களை சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள்.

சசிகலா, தெல்கி உள்ளிட்ட பணக்கார கைதிகள், சிறை டிஜிபி சத்தியநாராயண ராவ், தலைமை கண்காணிப் பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட‌ அதிகாரிகளுக்கு கோடிக்கணக் கில் லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’’ என புகார் தெரிவித்தார்.

சிறையில் ரூபா சோதனை நடத்தியபோது கைதிகள் சிலர் ஏராளமான புகாரையும், அதற்கு ஆதாரங்களையும் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதனால் கோபமடைந்த‌ டிஜிபி சத்திய நாராயணராவ், தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ரூபாவுக்கு ஆதரவான கைதி களைத் தாக்கியதாக தெரி கிறது.

மேலும், டிஜிபி சத்தியநாராயணராவுக்கு ஆதரவான கைதி கள் சிறையில் இருந்த ரூபா ஆதரவு கைதிகளைச் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, கடந்த 15-ம் தேதி இரவு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் பெல்லாரி, பெலகாவி, மைசூரு உள்ளிட்ட சிறைகளுக்கு உடனடி யாக‌ மாற்றப்பட்டனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட கைதிகளில் அனந்தமூர்த்தி, பாபு, ‘லாங்’ பாபு ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் தாங்கள் தாக்கப்பட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில், பெங்களூ ருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மனோகர் ரங்கநாதன் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படை யில் தேசிய மனித உரிமை ஆணையம், ‘‘32 கைதிகள் உடனடி யாக வேறு சிறைக்கு மாற்றப் பட்டது ஏன்? கைதிகள் தாக்கப்பட் டார்களா? என்பது தொடர்பாக 4 வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி கர்நாடக சிறைத்துறை டிஜிபி, டிஐஜி, சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இதனால் சிறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT