இந்தியா

விவசாய கடனை ரத்து செய்ய சந்திரபாபு நாயுடு உறுதி

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் முக்தாபுரம் பகுதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:

மக்களின் நலனே எனக்கு முக்கியம். நான் தேர்தலுக்கு முன் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டேன்.

அப்போது விவசாயிகளின் வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டுமென முடிவு செய்தேன். மொத்தமுள்ள ரூ.24,500 கோடி வங்கிக் கடனை முழுவதுமாக ரத்து செய்வதே எனது லட்சியம். பட்டிசீமா அணைக்கட்டு திட்டத்தை பலர் விமர்சித்தனர். ஆனால் தற்போது அந்த அணைக்கட்டால்தான் ராயலசீமாவிற்கு தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா டெல்டா பகுதிகளுக்கு உரிய காலத்தில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

SCROLL FOR NEXT