ஜம்மு காஷ்மீர், அசாம் உட்பட சில மாநிலங் களில் மோமோஸ் எனப்படும் உணவுப் பொருளுக்கு பொது மக்களிடம் அமோக வரவேற்பு காணப்படுகிறது. இது அரிசி மாவுக் குள் இனிப்பு, காரம் வைத்து கொழுக்கட்டை போல் செய்யப்படு கிறது. விதவிதமான வடிவங்களில் மோமோஸ் செய்து காஷ்மீர் தெரு வோரக் கடைகளில் விற்கின்றனர். இந்த உணவு உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறி காஷ்மீர் சட்ட மேலவை உறுப்பினர் ரமேஷ் அரோரா கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில், ஜம்முவின் முக்கிய பகுதியில் ரமேஷ் அரோரா நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினார். மதத் தலைவர்கள் சிலரும் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பேரணியில் பங்கேற்றனர். ‘மோமோஸ் சைலன்ட் கில்லர்’, ‘மோமோஸ் ஸ்லோ டெத்’ போன்ற வாசகங் கள் எழுதிய பதாகைகளைக் கையில் ஏந்தி தன்னார்வலர்கள் கோஷமிட்டு சென்றனர்.
இதுகுறித்து ரமேஷ் அரோரா கூறியதாவது:
மது, போதை மாத்திரையை விட அபாயகரமானது மோமோஸ். வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங் களின் தெருவோரக் கடைகளில் மோமோஸ் விற்பனை புதிய வரவாக உள்ளதை மறுக்க முடியாது. ஜம்முவில் மோமோஸ் விற்கும் கடைகள் அதிகரித்து விட்டன. இறைச்சி வைத்து வேக வைக்கப்பட்ட மோமோஸை இளைஞர்கள் சாப்பிடுவது அதிகரித் துள்ளது.
இதில் சுவையைக் கூட்டுவதற்கு அஜினோமோட்டோ (மோனோ சோடியம் குளூடாமேட்) பயன் படுத்தப்படுகிறது. இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது. புற்றுநோய் கூட இதனால் வருவதற்கு வாய்ப்புள்ளது.
உயிருக்கே ஆபத்தான பல நோய்களுக்கு இதுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இளைய சமுதாயத்தினரை மோமோஸ் கொன்று வருகிறது. இதை மத்திய அரசும் மாநில அரசும் தடை செய்யும் வரை எனது பிரச்சாரத்தை தொடர்ந்து செய்வேன்.
இவ்வாறு ரமேஷ் அரோரா கூறினார்.