இந்தியா

பாஜக வேட்பாளராக கர்நாடக எம்.பி.க்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி பசவராஜ் பாட்டீலை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்த பாஜக மேலிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறது.

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதில் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபடுள்ளது.

குடியரசுத் தலைவர் பதவிக்கு வட இந்தியாவைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளதால், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தென் இந்தியாவை சேர்ந்த ஒருவரை நிறுத்த பாஜக மேலிடம் முடிவெடுத்துள்ளது. இதன்படி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் முதலில் பரிசீலிக்கப்பட்டது.

மாநில தேர்தல் கணக்கு

அப்போது பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றியை அளிக்காத‌ தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலைவர்களை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், அதனை மனதில் வைத்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். கர்நாடகாவை சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளித்தால், தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் ஆலோசனை வழங்கினர்.

இதனால் கர்நாடகாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி பசவராஜ் பாட்டீல் சேடம் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தலாம். கர்நாடகாவில் கணிசமாக வாழும் லிங்காயத்து வகுப்பை சேர்ந்த அவரை நியமித்தால் பாஜவுக்கு கூடுதல் பலமாக அமையும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, மேலிடத் தலைவர்களுக்கு பரிந்துரை வழங்கியதாக கூறப் படுகிறது. எனவே பாஜக மேலிடத் தலைவர்கள், பசவராஜ் பாட்டீல் சேடம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பாஜக மாநிலங்களவை எம்பியான பசவராஜ் ஐதராபாத்- கர்நாடகாவை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள இவர், கர்நாடக சட்ட மேலவையின் தலைவராக பதவி வகித்துள்ளார். ஐதராபாத்- கர்நாடகாவை சேர்ந்தவர் என்ப தால் பசவராஜ் பாட்டீலுக்கு லிங் காயத்து வகுப்பினர் மட்டுமல்லா ம‌ல் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்தவர்களும் ஆதரிப்பார்கள் என தெரிகிறது.

SCROLL FOR NEXT