போலிச் சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்திருந்தாலோ, பட்டம் பெற்றிருந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் பணியை பறிக்கலாம், பட்டத்தை பறிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, "போலிச் சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்திருந்தாலோ, போலி சாதிச் சான்றிதழ் மூலம் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கல்லூரியில் பட்டம் பெற்றிருந்தாலோ அதனை உடனடியாக ரத்து செய்வதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும் இந்தத் தீர்ப்பை முன் தேதியிட்டு செயல்படுத்த முடியாது. இனிவருங்காலங்களில் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனத் தெரிவித்தனர்.