இந்தியா

நேபாளம் - இந்தியாவுக்கு 3 வழித்தடங்களில் பேருந்து

செய்திப்பிரிவு

சார்க் நாடுகளின் மோட்டார் வாகன போக்குவரத்து ஒப்பந்தங்களின்படி, இந்தியா மற்றும் நேபாளம் இடையே நேற்று முன்தினம் நேரடி பேருந்து போக்குவரத்து ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் சமீபத்திய நேபாள பயணத்தின்போது, இருநாடு களுக்கு இடையே போக்குவரத்து அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி, மூன்று வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

முதல் வழித்தடத்தில் பேருந்து காத்மண்டுவில் கிளம்பி பைரஹவா, சுனௌலி, கோரக்பூர், லக்னோ வழியாக புதுடெல்லியை அடையும். இரண்டாவது வழித்தட பேருந்து காத்மண்டுவில் கிளம்பி பைரஹவா, சுனௌலி, ஆசம்கர், வாரணாசி வழியாக புதுடெல்லியை அடையும். மூன்றாவது வழித்தட பேருந்து காத்மண்டு - போக்ஹரா, சுனௌலி, கோரக்பூர், லக்னோ வழியாக புது டெல்லியை அடையும்.

தற்போது நேபாளம் செல்ல, உபி, உத்தராகண்ட் மற்றும் பிஹார் மாநிலங்களில் அதன் எல்லைகள் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். அங்கிருந்து நேபாள சோதனைசாவடி வழியாக கால்நடையாக நுழைந்து, கார், ஜீப் மற்றும் பேருந்து என வேறு வாகனங்களில் செல்ல வேண்டி இருக்கும். தற்போதைய நேரடி பேருந்துகள் மூலம், இருநாடுகளிலும் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT