ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த மோதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம், ட்ரால் பகுதியில் உள்ள சட்டூரா வனப் பகுதியில், தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று காலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்புபடை யினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நேற்று காலையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட் டனர். மற்றொரு தீவிரவாதி ஒரு குகையில் தஞ்சம் அடைந்ததால் அவருக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தது. இந்நிலையில் பல மணி நேர சண்டைக்கு பிறகு அவரும் கொல்லப்பட்டார்.
இவர்கள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப் பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அவர்களை அடை யாளம் காணும் பணி நடக்கிறது. சம்பவ இடத்திலிருந்து, தீவிர வாதிகள் பயன்படுத்திய ஆயுதங் களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.