இந்தியா

மாற்றம் கொண்டுவர துணிச்சல் தேவை: இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் பேச்சு

செய்திப்பிரிவு

“சுதந்திரத்துக்குப் பிறகு அடைந்திருக்க வேண்டிய அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடையவில்லை. மாற்றம் கொண்டுவர துணிச்சல் தேவை” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் நேற்று, 2015-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவுக்குப் பிறகு சுதந் திரம் அடைந்த பல நாடுகள் நம்மை விட அதிக பொருளா தார பிரச்சினைகளை எதிர் கொண்டபோதும் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. மாற்றங்களைக் கொண்டுவர துணிச்சல் தேவை. மாற்றங்களை எதிர்க்கும் மானோபாவத்தில் சிக்கிக் கொள்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய இந்தியாவுக்கான ஆற்றலை இந்திய நிர்வாக அமைப்பில் நிரப்ப வேண்டும்

இளம் அதிகாரிகள் தங்களின் அடுத்த 3 மாத பயிற்சியில் மத்திய அரசின் மூத்த அதிகாரி களுடன் சகஜமாக கலந்துரையாட வேண்டும். இளம் அதிகாரிகளின் ஆற்றல் மற்றும் புதிய யோசனை களும் மூத்த அதிகாரிகளின் அனுபவமும் இணைவதன் மூலம் நிர்வாக அமைப்பு பலன் அடையும். நீங்கள் இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நாள் வரையிலான உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த சவால்களை நினைத்துப் பாருங்கள். தற்போது நீங்கள் பெற்றுள்ள வாய்ப்புகள் மூலம் அரசு நிர்வாகத்திலும் எளிய மக் களின் வாழ்க்கையிலும் ஆக்கப் பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT