மல்லையா மீதான நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு சான்றாக 2,000 பக்க விரிவான ஆதாரங்களை பிரிட்டன் அதிகாரிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.
முக்கிய வழக்கு, அதாவது விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றிய வழக்கு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே இந்திய அதிகாரிகளுடன் கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் அருமையாக ஒத்துழைத்து வருவதாக அதை பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மல்லையா நிதிமுறைகேடுகள் தொடர்பாக சமீபத்திய தகவல்களுடன் கூடிய 2000 பக்க விரிவான ஆதார ஆவணத்தை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இந்தியா அனுப்பியுள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 2 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. முக்கிய வழக்கு டிசம்பர் 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
டிசம்பர் 4 வரை ஜாமீனில் இருக்கும் மல்லையா வியாழனன்று நடைபெற்ற விசாரணைக்கு நேரில் வந்திருந்தார், அப்போது, ‘நாங்களும் எங்களுக்கான ஆதாரங்களை அளிப்போம்” என்று அவர் கூறினார்.