நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது புதிய இந்தியாவை உருவாக்குகிறோம் என்றார்.
டிசம்பர் 9, 1946ல் நாடாளுமன்றம் முதன் முதலில் கூடிய இடத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம். மத்திய மண்டபம் எப்போதும் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்ய ஒரு புனிதமான இடம்.
நவம்பர் 1949-ல் இதே இடத்தில்தான் அரசியல் சாசனம் வழங்கப்பட்டது. இப்போது இதே புனித இடத்தில் ஜிஎஸ்டி அறிமுகத்திற்காக நாம் கூடியுள்ளோம்.
ஜிஎஸ்டி நாட்டின் சிறந்த மூளைகளின் தயாரிப்பாகும். ஜிஎஸ்டி வரி கூட்டுறவு கூட்டாட்சிக்கு ஒரு சிறந்த உதாரணம்.
ஜிஎஸ்டி கவுன்சி. மற்றும் இந்த வரிச்சீர்த்திருத்தத்தை கொண்டு வந்த அனைவரையும் வாழ்த்துகிறேன், எதிர்கால அரசி யார் அமைத்தாலும் ஏழைகளுக்கான ஜிஎஸ்டி வரிக் கொள்கையின் படி நடப்பர்.
ஜிஎஸ்டி வரி பொருளாதார ஒருமித்தலை கொண்டுவரும், வலல்பாய் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்தது போல்.
18 கூட்டங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி அமலாகிறது, பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள் போல்.
வருமான வரி புரிந்து கொள்ள கடினமான ஒரு விடயம் என்றார், அவர் இங்கு இருந்தால் என்ன நடக்கிறது என்று கேட்டிருப்பார்.
ஜிஎஸ்டி வெளிப்படையானது, இது கறுப்புப் பணத்தை தடுக்கும் நேர்மையை ஊக்குவிக்கும், கண்காணிப்பு ராஜ்ஜியத்தை ஜிஎஸ்டி முடிவுக்குக் கொண்டு வரும், மக்களுக்கு குறைந்த சுமையே. ஜிஎஸ்டி பற்றி பெரிய பெரிய வார்த்தைகள் பேசப்படுகிறது, ஆனால் அது ஏழைகளுக்கு உதவும் என்ற எளிமையைக் கொண்டது.
நாம் கிடைக்கோட்டு வளர்ச்சியைக் கண்டு வருகிறோம், ஆனால் குத்துக்கோட்டு வளர்ச்சியையும் நாம் உறுதி செய்ய வேண்டும். ஆட்சியதிகாரத்தின் நிழல் பகுதிகளை இது முடிவுக்குக் கொண்டு வரும், ஜிஎஸ்டி மிகவும் எளிமையானது 12ம் வகுப்பு படிப்பவர்கள் வியாபாரிகளுக்கு கணக்குகள் தாக்கல் செய்ய உதவிட முடியும். வதந்திக் கடைகளை மூட இது நேர்மாகும். நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.
மாநிலங்களிடையே சமத்துவமின்மையை ஜிஎஸ்டி முடிவுக்குக் கொண்டு வரும். அதிகம் வளர்ச்சியுறாத மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி உதவும். புதிய இந்தியாவை வளர்த்தெடுக்க ஜிஎஸ்டி முக்கியப் பங்கு வகிக்கும். ஜிஎஸ்டி வெறும் பொருளாதார சீர்த்திருத்தம் மட்டுமல்ல, சமூகச் சீர்த்திருத்தம் கூட.
இவ்வாறு பேசினார் மோடி.