இந்தியா

ஆதார் பிரச்சினைகள் குறித்த இறுதி முடிவை அரசியல் சாசன அமர்வு எடுக்கும்: உச்ச நீதிமன்றம்

பிடிஐ

ஆதார் எண் குறித்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அரசியல் சாசன அமர்வு இறுதியாக முடிவெடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, இது குறித்த பிரச்சினைகளுக்கான முடிவெடுக்க அரசியல் சாசன அமர்வை நியமிக்குமாறு தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தவும் என்று கூறியது.

“மத்திய அரசும், மனுதாரர்களும் தலைமை நீதிபதியிடம் அரசியல் சாசன அமர்வை நியமிக்குமாறு கோரிக்கை வைக்க அறிவுறுத்துகிறோம்” என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் மற்றும் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆகியோர் தலைமை நீதிபதியிடம் அரசியல் சாசன அமர்வை நியமிக்குமாறு கேட்டுக் கொள்வோம் என்று உறுதி அளித்தனர்.

ஜூன் 27-ம் தேதி உத்தரவில் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று உச்ச நீதிமன்ற விடுப்புகால அமர்வு தெரிவித்திருந்தது.

மனுதாரர்களின் அச்சங்களை அடிப்படையாகக் கொண்டு அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று ஆதார் எண் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளைக்கும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இறுதி முடிவை எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT