இந்தியா

இந்தியப் பருவநிலையைச் சோதிக்கும் வாகனப்புகை உள்ளிட்ட தூசு மண்டலம்

ஜேக்கப் கோஷி

பொதுவாக பருவநிலை மாற்றங்களை பசுமையில்ல வாயுக்கள் என்ற கிரீன் ஹவுஸ் கேஸஸ் தீர்மானிக்கும் வேளையில் இந்திய பருவநிலை மாற்றங்களுக்கு வாகனப்புகையின் அளவு, பயிர் எச்சங்கள் எரிப்பு, ரசாயன வெளியேற்றங்கள் ஆகியவை கடும் சோதனைகளை ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது

புனேயைச் சேர்ந்த வெப்ப மண்டல இந்திய வானிலை ஆய்வுக் கழகம், பருவநிலை ஆய்வாளர் ஆர்.கிருஷ்ண்டன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டது. இது அடுத்த நூற்றாண்டில் பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படும் பருவநிலைத் தாக்கங்கள் குறித்த தனது ஆய்வில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

‘கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற இதழில் பசுமை இல்ல வாயுக்கள், காற்றில் கலக்கும் வாகனப்புகை, ரசாயன வெளியேற்றங்கள், காடுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பருவநிலையின் வலுவை பாதிப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக இது வலுவிழந்து வருவதாக இந்த இதழில் அவர் தெரிவித்துள்ளார்.

கணினி மாதிரி ஆய்வில் பசுமை இல்ல வாயுக்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை விட காற்றில் கலக்கும் தூசிகள், வாகனப்புகை மற்றும் ரசாயன வெளியேற்றம் விவசாயப் பயிர் எச்சங்களை எரித்தல் உள்ளிட்ட காரணிகள் அதிக தாக்கங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இவைதான் இந்திய பருவநிலை வலுவிழப்பதற்குப் பிரதான காரணங்கள் என்று ஆர்.கிருஷ்ணன் கடந்த வாரம் இந்திய அகாதெமி ஆஃப் சயன்ஸஸில் பேசும் போது குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டில் வானிலை முன்னறிவிப்புகளுக்கு புதுமைப்படுத்தப்பட்ட மாதிரியை இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகிறது, இதன் மூலம் புவிவெப்பமடைதல், பருவ நிலை மாற்றங்களுக்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் அறிக்கைகளுடன் இந்திய வானிலை அறிக்கையும் ஒரு பகுதியாகவுள்ளது.

சூரிய ஒளிக்கற்றைகளிலிருந்து பெரிய தூசி மண்டலம் பூமியை மறைத்து வருகிறது. இதனால் நிலம் மற்றும் கடல் வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த இரண்டு வெப்ப அளவுகளுக்கு இடையேயுள்ள வித்தியாசம்தான் பருவநிலையைத் தீர்மானிக்கிறது, தற்போது இது பலவீனமடைந்துள்ளது என்கிறது ஆய்வு.

SCROLL FOR NEXT