இந்தியா

காஷ்மீரில் 2 ஜெய்ஷ்-இ-மொகமது இயக்க தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

பீர்சதா ஆஷிக்

காஷ்மீரின் சதுரா கிராமத்தில் உள்ள வான்டிவென் காடுகளுக்கு அருகே தீவிரவாதிகளுக்கு எதிராக சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

புல்வாமா மாவட்டத்தில் நடந்து வரும் இந்த என்கவுன்ட்டரில் 2 ஜெய்ஷ்- இ- மொகமது தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் அடிக்கடி தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இவர்களை ஒழிக்கும் வகையில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் தாக்குதலைத் தொடங்கினர்.

இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் தாக்குதல் ஆரம்பித்தது.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, ''குறைந்தபட்சம் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். வான்டிவென் வனக் குகைகளில் ஏராளமான தீவிரவாதிகள் மறைந்திருப்பதால் தாக்குதல் இன்னும் தொடர்கிறது'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT