இந்தியா

ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது

பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஷாபஸ் ரசுல் மிர் என தெரிய வந்துள்ளது. அவரது இருப்பிடத்திலிருந்து துப்பாக்கிகள், கத்திகள், கையெறி குண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT