சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரும் தீவிரவாத அமைப்பு களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் தேடப்படுப வருமான ஜாகிர் நாயக்கின் (51) பாஸ்போர்ட் ரத்து செய்ப்பட்டது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரி ஒருவர் கூறும்போது, “தலைமறைவாக உள்ள ஜாகிர் நாயக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பாஸ்போர்ட் அலுவலகத்தை என்ஐஏ கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக ஜூலை 13-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஆஜராகாததால், அவரது பாஸ்போர்ட்டை மும்பை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ரத்து செய்துள்ளது” என்றார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சில தீவிரவாதிகள், ஜாகிர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டு புனிதப் போரில் (தீவிரவாதம்) ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நாயக் தலைமறைவானார்.