ஜம்முவில் இருந்து அமர்நாத் துக்கு 1,278 பக்தர்கள் கொண்ட 20-வது குழு நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது.
அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை வரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 555 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித் துள்ளதாக செய்தித் தொடர் பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜம்முவில் இருந்து பல்தால் மற்றும் பஹல்காம் முகாம்களை நோக்கி இருந்து 1,278 பேருடன் 20-வது குழுவினர் நேற்று காலை புறப்பட்டனர். இந்த பக்தர்களில் 404 பேர் பெண்கள். 100 பேர் சாதுக்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பாதுகாப் புடன் மொத்தம் 85 வாகனங்களில் பக்தர்கள் சென்றனர்.
அமர்நாத் யாத்திரைக்காக போலீஸ், ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வீரர்களை பாதுகாப்பு பணியில் அரசு ஈடுபடுத்தியுள்ளது.