குடியரசு துணைத் தலைவருக் கான தேர்தலில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதே சமயம் 9 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வரும் ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் தேதி ஆகஸ்ட் 5ம் தேதி என அறிவிக் கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 9 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 4 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மக்களவை தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் என்பதை நிரூபிக் கும் வகையிலான சான்றித ழையோ, தேர்தலில் போட்டியிடு வதற்கான ரூ.15,000 டெபாசிட் தொகையையோ அவர்கள் செலுத்தவில்லை. இதன் காரண மாகவே அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கூறினார்.
எஞ்சிய 5 பேரின் வேட்பு மனுக்களும், ஜூலை 19-ம் தேதி (வேட்பு மனுக்கள் பரிசீலிக்கும் நாள்) நிராகரிக்கப்படும் என தெரிகிறது. ஏனெனில் வேட் பாளர்களை 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். மேலும் 20 எம்.பி.க்கள் வழிமொழிய வேண்டும். அவர்களை ஆதரித்து இதுவரை யாரும் முன்மொழிய வில்லை.
அதேசமயம் ஆளும் பாஜக கூட்டணி சார்பிலும், எதிர்க்கட்சி யான காங்கிரஸ் கூட்டணி சார்பி லும் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.