இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: 12 பேர் பலி; 4 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசத்தில், மினி பேருந்து டிரக் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் பலியாகினர்.

சம்பவம் குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் அம்ரோவா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் வேகமாக சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று மினி பேருந்து மீது மோதியது. இதில் மினி பேருந்தில் இருந்தவர்கள் 12 பேர் பலியாகினர். பேருந்தின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டிரக் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க போலீஸார் விரைந்துள்ளனர்" என்றார்.

இந்தியாவிம் ஆண்டொன்றுக்கு 1,10,00 சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. அவற்றில் பெரும்பாலனவை ஓட்டுநர் கவனக்குறைவாலேயே நடைபெறுகின்றன என புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

SCROLL FOR NEXT