அமர்நாத் தாக்குதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக பிடிபி கட்சி எம்.எல்.ஏ.வின் போலீஸ் டிரைவர் தவ்சீப் அகமதுவை ஜம்மு காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் பிரிவின் போலீஸாவார் தவ்சீஃப் அகமது, இவர் வாச்சி தொகுதியின் பிடிபி எம்.எல்.ஏ. அய்ஜாஸ் அகமட் மிர் என்பவரின் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார்.
இவரைத்தான் இருநாட்களுக்கு முன்னதாக போலீஸார் அமர்நாத் யாத்திரிகர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்துள்ளனர்.
இதோடு மட்டுமல்லாமல் காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான தாக்குதல் விவகாரமாக விசாரிக்கவும் இவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தீவிரவாதிகளுக்கு உதவி புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவரோடு மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர், ஆனால் இவர்கள் பற்றிய விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.
எம்.எல்.ஏ.வின் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட தவுசீப் அகமதுவுக்கு அமர்நாத் தாக்குதலில் தொடர்பிருக்கிறதா என்பது உடனடியாக தெளிவு பெறவில்லை என்றாலும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஜூலை 10 தாக்குதல் மற்றும் பிற தீவிரவாத நடவடிக்கைகளில் இந்த ஓட்டுநரின் ஈடுபாடு தெளிவடையும் என்றார்.