இந்தியா

‘ஒழுகும் கூரை வீட்டில் வசித்தேன்’ : ராம்நாத் கோவிந்த்

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். இப்போது டெல்லியில் மழை பெய்கிறது. இது என்னுடைய சொந்த ஊரில் வசித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை நினைவுபடுத்துகிறது. சிறு வயதில் இருந்தபோது மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால் வீட்டுக்குள் ஒழுகும். இதனால் மழை விடும் வரை நானும் எனது சகோதர, சகோதரிகளும் சுவர் ஓரம் ஒதுங்கி நிற்போம்.

நாடு முழுவதும் என்னைப் போல பலர், இன்றும் விவசாய வேலையிலும், கூலி தொழி லிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வயிற்றுப் பிழைப் புக்காக மழையில் நனைந்தும் வியர்வை சிந்தியும் கஷ்டப் படுகின்றனர். உங்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் குடியரசுத் தலைவர் அலு வலகத்துக்குச் செல்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வளமுடன் வாழ அயராது பாடுபடுவேன்.

நாட்டின் குடியரசுத் தலைவராவேன் என்று ஒருபோதும் நான் நினைத் ததில்லை. அப்படி ஒரு விருப்பமும் இல்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பது மற்றும் அதன் கவுரவத்தை பராமரிப்பதை கடமையாகக் கொண்டு செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT