நடிகை பாவனா விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலிப்புக்கு அலுவா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தை நாடவிருக்கிறார்.
ஜாமீன் மறுக்கப்பட்டதால் அலுவா சப் ஜெயிலில் ஜூலை 25-ம் தேதி வரை திலிப் இருக்க வேண்டும். இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி இவர் கேரள உயர் நீதிமன்றத்தை ஜாமீன் கேட்டு நாடவுள்ளார்.
ஜூலை 15-ம் தேதியன்று ஜாமீன் மனு கோரப்பட்டதன் மீது நடந்த விசாரணையில் திலிப் செல்வாக்கு மிக்கவர் இந்நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று அலுவா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது.
ஜூலை 10-ம் தேதி நடிகர் திலிப் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.