இந்தியா

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

பிடிஐ

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவானது.

இதுகுறித்து தேசிய புவியியல் மையம் வெளியிட்ட தகவலில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.21 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

ஜம்முவில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5.48 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

முன்னதாக ஆந்திர மற்றும் குஜராத் மாநிலங்களில் திங்கட்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT