இந்தியா

பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம்

செய்திப்பிரிவு

இதுவரை தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட், முதன்முறையாக நேற்று பொது பட்ஜெட்டுடன் (2017-18) சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. இதில் கூறியிருப்பதாவது:

வரும் (2017-18) நிதியாண்டில் ரயில்வே துறைக்காக ரூ.1.31 லட்ச ம் கோடி நிதி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் ரூ.1.21 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் 3,500 கி.மீ. துரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் 2,800 கி.மீ. ஆக உள்ளது.

ரயில் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும். அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளை தடுக்க ரயில் பாதைகள் மற்றும் சமிக் ஞைகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். மேலும் பாது காப்பை உறுதி செய்யும் வகை யில், 2020-க்குள் அகல ரயில் பாதை களில் உள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்குகள் அகற்றப்படும்.

நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அனைத்து ரயில் பெட்டிகளிலும் 2019-க்குள் உயிரி கழிவறை அமைக்கப்படும். அத்துடன் பயணிகளின் வசதிக்காக, ‘என்னுடைய பெட்டியை சுத்தம் செய்யவும்’ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.

இணையதளம் வழியாக டிக் கெட் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்சிடிசி இணைய தளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படும். ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி மற்றும் கான்கர் ஆகிய ரயில்வே பொதுத் துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். சுற்றுலா தலங்களுக்கென தனி ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய மெட்ரோ ரயில் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT