வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க கோடை விடுமுறையில் உச்ச நீதிமன்றத்தில் 3 அரசமைப்பு அமர்வு அமர்த்தப்பட்டிருக்கும் என தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 10 வழக்கு களை பைசல் செய்யும் வகையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து 5 நாட்கள் அமர்ந்திருக்கும்படி நீதிபதிகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத் தின் 150-வது ஆண்டுவிழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
திருமணம் தொடர்பான வழக்குகள் உள்பட சிறு பிரச் சினைகளுக்காக தொடரப்பட் டுள்ள வழக்குகளைக் கோடை விடுமுறையில் பைசல் செய்ய முடியும். இதன்மூலம் நிலுவை யில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையும் குறையும். முத்தலாக் போன்ற மிக முக்கியமான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த கோடை விடுமுறையில் 5 நீதிபதிகள் கொண்ட 3 அமர்வுகள் அமைக் கப்படும்.
இந்த அரசமைப்பு அமர்வு முத்தலாக் வழக்கை வரும் மே 11-ம் தேதி முதல் விசாரிக்கும். இதுதவிர ஆதார் மற்றும் வாட்ஸ் அப் தொடர்பான வழக்குகளையும் இந்த 50 நாள் கோடை விடுமுறையில் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.