பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, கடந்த 1990-களில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்குகளில் ஆஜராக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு லாலு நேற்று வந்தார். அப்போது செய்தியாளர் களிடம் கூறும்போது, “பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி வைத் துள்ளன. இந்தக் கூட்டணியை உடைக்க முடியாது. லாலு - நிதிஷ் குமார் கூட்டணி உடைக்க முடியாதது. எங்கள் கூட்டணியை உடைக்க நரியைப் போல பிஹார் பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி முயற்சி செய்கிறார். அவரது முயற்சி பலிக்காது” என்றார்.