நாடு முழுவதும் விஜபிக்களின் வாகனங்களில் சிவப்பு விளக்கை அகற்ற மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தான் மசூதியின் இமாம் மவுலானா சையது நூர் ரஹ்மான் பார்கதி, முக்கிய மதத் தலைவர் என்ற காரணத்தால் அவரது வாகனத்தில் சிவப்பு விளக்கைப் பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்திருந்தது.
ஆனால் மத்திய அரசின் தடை உத்தரவை இமாம் பார்கதி ஏற்கவில்லை. மேலும் நாட்டுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்து களையும் தெரிவித்தார்.
இதையடுத்து மசூதியின் இமாம் மவுலானா சையது நூர் ரஹ்மான் பார்கதி நீக்கப்படுவதாக மசூதி அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று அறிவித்தனர்.