இந்தியா

ரூ.500, 1000 பழைய நோட்டுகள் வைத்திருந்த 5 பேர் கைது: ரூ.70 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.70.50 லட்சம் வைத்திருந்த 5 பேர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மச்சி பஜாரில் இவர்கள் ஆட்டோ ஒன்றில் சென்றபோது, அதை இடைமறித்து போலீஸார் சோதனை நடத்தினர். அதில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 கரன்சிகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நோட்டுகளின் மதிப்பு ரூ.70.50 லட்சம் என பத்ரிநாத் போலீஸ் நிலைய பொறுப்பாளர் விஜய் ராஜ்புத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆட்டோவில் பயணம் செய்த அரவிந்த், முகேஷ், மகேஷ் சர்ஷா உட்பட 5 பேர், செல்லாத நோட்டு வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டனர்.

இந்த பழைய நோட்டுகளை உஜ்ஜைன் மாவட்டத்திலிருந்து கொண்டு வருவதாகவும் இந்தூரில் உள்ள ஒருவரிடம் இவற்றை ஒப்படைக்க இருந்ததாகவும் விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக விஜய் ராஜ்புத் தெரிவித்தார்.

தனி நபர்கள் பழைய நோட்டு களை 10 தாளுக்கு மேல் வைத் திருந்தால் கிரிமினல் குற்றமாகும். அதற்கு அபராதம் விதிக்கப்படும்.

SCROLL FOR NEXT