மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், மாநிலங்களவை உறுப் பினராக இருந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பதவியை ராஜினாமா செய்த அவர், கோவா முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, 6 மாதத் துக்குள் அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
எனவே, பாரிக்கர் அங்கு நடை பெற உள்ள இடைத்தேர்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிடு வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் கூறும்போது, “பனாஜி தொகுதியில் பாரிக்கர் போட்டியிட வேண்டும் என கட்சி முடிவு செய்துள்ளது. முதல்வருக்காக, தற்போது பனாஜி தொகுதி எம்எல்ஏவாக உள்ள சித்தார்த் குன்கோலியன்கர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளார்” என்றார்.