தேசிய நெடுஞ்சாலைகளில் செயல் படும் மதுக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட வேண்டும் என்று கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இவ் வழக்கு நேற்றுமுன்தினம் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுவைவிட உயிர் பெரிது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.