திருமலை ஏழுமலையான் கோயி லுக்கு நேற்று முன்தினம் கோயி லுக்கு திருவண்ணாமலையை சேர்ந்த சாந்தம்மாள், அவரது குடும்பத்தினர் வந்தனர்.
விடுதி கிடைக்காததால் கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் சாந்தம்மாள், அவரது குடும்பத்தினர் தூங்கினர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, சாந்தம்மாள் எழுந்திருக்கவில்லை. அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினும் ரூ.500 ரொக்க பணமும் காணவில்லை. சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு விழித்தார் சாந்தம்மாள். அருகில் படுத்திருந்த மர்ம பெண் மயக்க மருந்து தெளித்து திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.