இந்தியா

திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

என்.மகேஷ் குமார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று குடும்பத்தினருடன் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருமலைக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமியை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இரவு திருமலையில் உள்ள சொகுசு விடுதியில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுத்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில் குடும்பத்தினருடன் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் கோயில் ரங்கநாயக மண்டத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள், வஸ்திரம், சுவாமியின் திருவுருவப்படம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருமலை யாத்திரை முடிந்ததும் உடனடியாக நேற்று அவர் சென்னை திரும்பினார்.

SCROLL FOR NEXT