இந்தியா

பெண் மேக்-அப் கலைஞர்களுக்கு தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பாலிவுட் திரைப்படங்களில், பெண் மேக்-அப் கலைஞர்கள் பணிபுரிவதைத் தடை செய்யும் விதத்தில், சங்கங்கள் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரியும் மேக்-அப் கலைஞர்கள் சங்கங்கள், தங்கள் சங்கங்களில் பெண் மேக்-அப் கலைஞர்கள், பெண் சிகையலங்கார நிபுணர்கள் உறுப்பினர்களாவதற்கு தடை விதித்திருந்தன.மேலும், அச்சங் கங்களில் உறுப்பினர்களா வதற்கு, ஒரு நபர் கட்டாயமாக குறிப்பிட்ட இடத்தில் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையும் இருந்தது.

இவ்விதிமுறைகளை எதிர்த்து, மேக்-அப் கலைஞர் சாரு குரானா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மேற்கூறிய இரு விதிமுறைகளையும் நீக்கி உத்தரவிட்டனர். இவ்விதிமுறை களை, சினி காஸ்ட்யூம்ஸ் அண்டு மேக்-அப் கலைஞர்கள் சங்கம்- மும்பை (சிசிஎம்ஏஏ) 10 நாட்களுக்குள் நீக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குரானா, கலிபோர்னியா மேக்-அப் பள்ளியில் படித்தவர். ஒரு பெண் என்ற காரணத்துக்காக அவரின் உறுப்பினர் விண்ணப் பத்தை 2009-ம் ஆண்டு சிசிஎம்ஏஏ நிராகரித்து விட்டது.

SCROLL FOR NEXT