இந்தியா

துப்பாக்கி முனையில் அழகியை நடனமாட வைத்த உ.பி. போலீஸ்: தற்காலிக பணி நீக்கம் செய்தபின் தலைமறைவு

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேசத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தனது துப்பாக்கி முனையில் அழகியை தொடர்ந்து நடனமாடச் செய்துள்ளார். அப்போது பணத்தையும் வாரி இறைத்த அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஷாஜஹான்பூர் மாவட்ட எல்லையில் உள்ள நிகோஹி எனும் இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ராம்லீலா நிகழ்ச்சி கொண் டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கடைசியாக மும்பை பார் அழகியின் ஆட்டம் நடைபெற்றது.

நள்ளிரவில் நிகழ்ச்சி முடிவடையும் தறுவாயில், அப்பகுதி காவல் நிலைய கான்ஸ்டபிள் சைலேந்தர் சுக்லா திடீரென அங்கு வந்து அழகியை தொடர்ந்து நடனமாடச் சொல்லி இருக் கிறார். இதற்கு அழகி மறுக்கவே, தனது துப்பாக்கியைக் காட்டி கான்ஸ்டபிள் மிரட்டியதால் உயிருக்கு பயந்த அந்த அழகி தொடர்ந்து நடனமாடி உள்ளார்.

மேலும், திரைப்படங்களில் வரும் வில்லன்களைப் போல, நடனமாடிய அழகி மீது ரூபாய் நோட்டுக்களை கான்ஸ்டபிள் இறைத்துள்ளார். அப்போது கான்ஸ்டபிள் குடிபோதை யில் தள்ளாடியபடி மேடையில் நின்று ஆட்டத்தை ரசித்துள்ளார். இதனால், மேடையின் முன்பு கூடியிருந்த அப்பகுதிவாசிகள் மிகுந்த பயத் துடன் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின்போது, பார்வை யாளர்களில் ஒருவரது செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி நேற்று முன்தினம் வெளியா னது. அதைத் தொடர்ந்து ஷாஜஹான் பூர் மாவட்ட காவல் துறை நடவடிக் கையில் இறங்கியது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஷாஜஹான்பூர் மாவட்ட காவல் துறை சிறப்பு கண்காணிப்பாளர் ராகேஷ் சந்திர சாஹு கூறும்போது, “இதுதொடர்பாக செய்தி வெளியானவுடன் சைலேந்தர் சுக்லா தலைமறைவாகி விட்டார். அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து தேடி வருகிறோம். சைலேந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகியின் மீது வாரி இறைக்கப்பட்ட சுமார் ரூ.30,000 அவருக்கு எங்கிருந்து வந்தது என்பது குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT