ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதே போல் மேலும் பல சட்டங்கள் இயற்றப்படுவது அவசியம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், "ஊழலை தடுக்கு இன்னும் பல சட்டங்கள் இயற்றப்படுவது அவசியம். அத்தகைய மசோதாக்கள் நிறைய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான காத்திருப்பில் உள்ளன. அரசு ஏற்கெனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இப்போது லோக்பால் மசோதாவையும் நிறைவேற்றியுள்ளது." என்றார்.