இந்தியா

மாநில பிரிவினையின்போது போராட்டங்கள் இயல்பானதே: உள்துறை அமைச்சர் ஷிண்டே

செய்திப்பிரிவு

மாநில பிரிவினையின்போது அதனை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்துவது இயல்பானதுதான் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

தனி தெலங்கானா அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததை தொடரந்து, ஆந்திர மாநிலத்தின் சீமாந்திரா பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஷிண்டே இவ்வாறு கூறியுள்ளார்.

இருப்பினும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நம்பிக்கையை பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனி தெலங்கானா உருவாக்கப்பட்டால் நக்சல் பிரச்சினை அதிகரிக்கும் என கூறப்படுவதை மறுத்த ஷிண்டே, ஆந்திர மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுக்குள் கொண்டு வருவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும், தெலங்கானா அமைக்கப்பட்ட பிறகும்கூட நக்சல்கள் கட்டுக்குள் வைத்திருக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டிருப்பதுபோல வேறு எந்த மாநிலமும் இப்போதைக்கு உருவாக்கப்படாது என்றிம் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறையும் போராட்டமும் வெடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தனித்தனியாக போராட்டங்களை மேற்கொண்டு வருவது கவனத்துக்குரியது.

SCROLL FOR NEXT