இந்தியா

சஹாரா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

ஐஏஎன்எஸ்

குஜராத் முதல்வராக பிரதமர் மோடி பதவி வகித்த காலத்தில் பிர்லா, சஹாரா நிறுவனங் களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. கடந்த 2014-ல் சிபிஐ அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சஹாரா நிறுவனத்தின் அலுவலங்களில் சோதனையிட்டபோது முக்கியமான டைரி சிக்கியது. அதில் எந்தெந்த அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற விவரங்கள் எழுதப்பட்டிருந் தன. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட அரசியல்வாதி களின் பெயர்கள் இடம் பெற் றிருந்தன.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் அடங்கிய அமர்வு முன் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த பின் பேசிய நீதிபதி கள், ‘‘ஆதாரங்களுக்கான மதிப்பு இல்லாத ஆவணங்கள் இவ்வழக் கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அதை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தும்படி உத்தரவிட முடியாது. தவிர இது அரசமைப்புக்கு எதிரானது. மேலும் ஜனநாயகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தர விட்டனர்.

SCROLL FOR NEXT